MARC காட்சி

Back
ஜெனரல் சர் வில்லியம் மெடோஸ்
000 : nam a22 7a 4500
008 : 181113b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
100 : _ _ |a ராபர்ட் ஹோம் (Robert Home 1752-1834)
245 : _ _ |a ஜெனரல் சர் வில்லியம் மெடோஸ் |b1 : |b2 =
300 : _ _ |a நவீனக் கலைகள் - எண்ணெய் வண்ண உருவ ஓவியம்
500 : _ _ |a

ராபர்ட் ஹோம் (Robert Home 1752-1834)

          ராபர்ட் ஹோம் (Robert Home 1752-1834) 1791 ஆம் ஆண்டில் இந்திய துணைக் கண்டத்தில் பயணம் செய்த பிரிட்டிஷ் எண்ணெய் ஓவிய ஓவியர் ஆவார். அவரது பயணத்தின்போது, வரலாற்று காட்சிகள் மற்றும் நிலப்பரப்புகளை அவர் வரைந்தார். இவர் இங்கிலாந்தில், பெர்விக்ஷையரில் உள்ள கிரீன்லாவிலிருந்தின் பிரபலமான இராணுவ அறுவை சிகிச்சை நிபுணரின் மகனாக ஹல் எனும் இடத்தில் பிறந்தார். இவர் 1769 ஆம் ஆண்டில் ராயல் அகாடமி பள்ளியில் சேர்ந்தார். 

          மேலும் இவர் 1773 ஆம் ஆண்டு ரோம் சென்று அங்கு ஏஞ்சலிகா காஃப்மன் இன் கீழ் ஓவியப் பயிற்சி எடுக்கச் சென்றார். பின்னர் 1777 வரை இத்தாலியில் இருந்தார். இவர் 1790 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வருவதற்கு முன் 1783 முதல் 1789 வரை டப்ளின் மற்றும் லண்டனில் பணியாற்றினார்.  ராபர்ட் ஹோம் 5 பிப்ரவரி 1791 இல், மூன்றாவது ஆங்கிலோ-மைசூர் போரில், லார்ட் கார்ன்வாலிஸின் படை பெங்களூரை நோக்கி நகர்ந்தபோது படையை பின் தொடர அனுமதிக்கப்பட்டார். இச்சமயங்களில் ஹோம் பிரசித்தி பெற்ற சில ஓவியங்களை வரைந்தார். அவற்றில், பிணையக் கைதியான இளவரசி, வகீலுடன் வீட்டை விட்டு வெளியேறுதல், குலாம் அலி மற்றும் திப்பு சாஹிப்பின் மகன்களை லார்ட் கார்ன்வாலிசு வரவேற்பது போன்றவை குறிப்பிடத் தக்கவையாகும்.

          ராபர்ட் ஹோம் 1792 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், தாமஸ் டேனியல் மற்றும் வில்லியம் டேனியல் ஆகியோருடன் நட்புறவு கொண்டார், அவர்கள் இயற்கைக் காட்சி ஓவியம் வரைவதற்கு ஊக்கப்படுத்தினா். ராபர்ட் ஹோம் ஜனவரி / பிப்ரவரி 1793 ல் மஹாபலிபுரம் சென்றார். அதன் விளைவாக இரண்டு ஓவியங்கள் தீட்டினார். அவை மஹாபலிபுரம் சிதைவுகள் என்ற பெயரில் கொல்கத்தாவில் உள்ள தி ஏசியாட்டிக் சொசைட்டியில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இவர் இந்திய பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன போன்றவற்றை 250 நீர் வண்ண ஓவியங்களாக தீட்டினார் அதே சமயம் சில எண்ணெய் வண்ண ஓவியங்களையும் வரைந்தார். இவர் இந்திய பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வனவற்றில் 215 நீர் நிறங்களை உருவாக்கியுள்ளார். 1795 ஆம் ஆண்டில் கொல்கத்தா வந்து சேர்ந்தார். அங்கு ஒரு வளர்ந்த கலைஞராக இருந்து கொண்டு பணி செய்தார். அவர் சிறிது காலத்திற்குச் சங்கத்தின் செயலாளராகவும் மற்றும் முதல் நூலகப் பொறுப்பாளராகவும் இருந்தார் (1804) மேலும் கலைச் சேகரிப்புக்காக தனது படைப்பினில் சிலவற்றை நன்கொடையாக வழங்கினார்.

          இவர் 1814 ஆம் ஆண்டில் லக்னோவிற்கு சென்றார். பின்னர் மன்னர் நவாப் காசி-உத்-டின் ஹைடர் (1769-1827 அரண்மனையில் அரசு ஓவியராக பணியமர்த்தப்பட்டார்.  ராபர்ட் ஹோம் 1827 இல், கான்பூருக்குப் பயணம் சென்றார். பின்னர் அங்கு இருந்த போது 1834 இல் இறந்தார். இவரது தேர்ந்தெடுத்த மைசூர் காட்சிகள், திப்பு சுல்தான் நாடு போன்ற படைப்புக்கள் 1794 ஆம் ஆண்டு லண்டன் மற்றும் மெட்ராஸில் பதிப்புப் பெற்றன.

ஜெனரல் சர் வில்லியம் மெடோஸ் கேபி (Sir William Meadows) 

          ஜெனரல் சர் வில்லியம் மெடோஸ் கேபி (Sir William Meadows)  (31 டிசம்பர் 1738 - 14 நவம்பர் 1813) ஒரு ஆங்கிலேயர் மற்றும் பிரித்தானிய இராணுவத்தில் உயர்ந்த பதிவியில் இருந்தார். சர் வில்லியம், ரிச்மண்ட் பார்க் துணை ரேஞ்சரான பிலிப் மெடோஸ் என்பவரின் மகன். இவர் 1756 ஆம் ஆண்டில் 50 வது காலாட் படைப்பிரிவில் பிரிட்டிஷ் இராணுவத்தில் நுழைந்தார். 1760 ஆம் ஆண்டில் ப்ரூன்ஸ்விக் இளவரசர் பெர்டினாண்ட் தலைமையிலான நேச நாட்டு இராணுவத்தில் சேர தனது படைகளுடன் சென்றார். பின்னர் 1782 வரை எண்ணற்ற போர்களில் பங்கு பெற்றார். தென் இந்தியாவில் பிரித்தானியர்கள் மைசூர் சுல்தான் ஹைதர் அலியால் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர் என மெடாஸ் அறிய வந்தார். பின்னர் மூன்று கப்பல்கள் மற்றும் ஒரு பெரிய துருப்புக்களோடு மெட்ராஸ்க்கு 13 பெப்ரவரி 1382 அன்று வந்தார். கர்னல் வில்லியம் ஃபுல்லார்டனுடன் சேர்ந்து மைசூருக்கு எதிரான போரில் பங்கேற்றார் ஆனால் திடீரென நிகழ்ந்த சமாதான பேச்சால் போர் முடிவுக்கு வந்தது.இவர் செப்டம்பர் 1788 ஆம் ஆண்டு பம்பாய் மாகாண கவர்னராக பதவியேற்றார். அதுபோல பம்பாய் இராணுவத்தின் தலைமை அதிகாரியாகவும் 1790 வரை பணிபுரிந்தார். பின்னர் சென்னை மாகாண ஆளுநராகவும், சென்னை இராணுவத்தின் தளபதியாகவும் பணியாற்றினார்.

          மைசூர் சுல்தானாக இருந்த ஹைதர் அலி மகன் திப்பு சுல்தான் மற்றும் அவரது வாரிசுடனான போரின் போது மெடோஸ் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள கவர்னர் ஜெனரல் கார்ன்வால்ஸ் அறிவுறுத்தினார். பதினைந்து ஆயிரம் வீரர்களுடன் தலைமையேற்று  திருச்சியிலிருந்து 15 ஜூன் 1790 இல் கிளம்பி மைசூர் எல்லைப்பகுதியை நோக்கி முன்னேறியது மெடோஸின் படை. இப்படை ஜூலை 22 அன்று, கோயம்புத்தூர் வந்தடைந்தது.  பிரிட்டிஷ் இராணுவத்தின் ஒரே கட்டளையை மேற்கொள்வதற்கான நோக்கத்தை கார்ன்வால்ஸ் அறிவித்தார். கார்ன்வாலிஸின் கீழ் 1791 முதல் 1792 ஆம் ஆண்டு வரை மெடோஸ் பணியாற்றினார். 1702 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ம் தேதியன்று இரவு ஸ்ரீரங்கப்பட்டணம் தாக்குதலுக்கு உள்ளானது. அவரது தாக்குதல் தவறாகி விட்டது, இரவின் இருளால் திட்டமிட்ட கோட்டையைத் தகர்க்கப்படாமல் மற்ற ஒன்றை தகர்க்க நேர்ந்தது. திப்பு இறுதியில் சமாதானத்திற்காக வழக்கு தொடர்ந்தார். அடுத்த நாள், மெடோஸ் தற்கொலை முயற்சி செய்தார். இதற்கான காரணம் தெரியவில்லை, பிப்ரவரி 6ம் தேதி நடவடிக்கைக்காக மெடாஸ் மீது கார்ன்வாலிஸ் எந்த குற்றமும் சுமத்தவில்லை. இறுதியாக திப்புவுடன் சமாதானம் செய்ய ஒப்புக்கொண்டு மார்ச் 18ம் தேதி ஸ்ரீரங்கபட்டண உடன்படிக்கை ஏற்பட்டது. பின்னர் அவர் ஆகஸ்ட் 1792 இல் கிரேட் பிரிட்டனுக்குச் சென்றார்.

510 : _ _ |a
  1. ஐ. ஜோப் தாமஸ், ‘தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு’,(காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்(பி) லிட்.,2014, 2015. 
653 : _ _ |a நவீன கால ஓவியம், ஓவியம், ஜெனரல் சர் வில்லியம் மெடோஸ், ராபர்ட் ஹோம், ராயல் அகாடமி, தேசியக் கலைக் கூடம், பிரித்தானிய இந்தியா, இங்கிலாந்து, சென்னை, அருங்காட்சியகம், திப்புசுல்தான்
700 : _ _ |a தணிகை மணி
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம்
752 : _ _ |a சென்னை அருங்காட்சியகம் |b # |c சென்னை |d சென்னை |f சென்னை
850 : _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம்
914 : _ _ |a 13.0713738
915 : _ _ |a 80.2564629
995 : _ _ |a TVA_PNT_00025
barcode : TVA_PNT_00025
book category : நவீனக் கலைகள்
cover :
Primary File :

TVA_PNT_00025_ஜெனரல்-சர்-வில்லியம்-மெடோஸ்-0001.jpg